ஒரே பள்ளியில் பல ஆண்டுகள்
படித்திருந்தாலும், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பல மாணவர்களுக்கு,
பிளஸ் 1 சேர்க்கையை, பள்ளி நிர்வாகம் மறுத்து வருகின்றன. இதனால், மாணவ,
மாணவியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளிவந்த நிலையில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், பிளஸ் 1 மாணவர்
சேர்க்கை நடந்து வருகிறது. இதில், பெரும்பாலான பள்ளிகளில், 10ம் வகுப்பு
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதே
பள்ளியில் படித்திருந்தாலும், 10ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்திருக்கும்
பட்சத்தில், பிளஸ் 1 சேர்க்கை மறுக்கப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர்
கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:
அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு,
மதிப்பெண் குறைவாக இருப்பினும் சேர்க்கை மறுக்கக் கூடாது என, பள்ளிக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை எந்த பள்ளிகளும்
பின்பற்றுவதில்லை. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, ஐந்தாண்டு அதே
பள்ளியில் படித்திருந்தாலும், மதிப்பெண் குறைவாக இருந்தால் சேர்க்கை
மறுக்கப்படுகிறது.
ஏற்கனவே படித்த பள்ளியிலேயே சேர்க்கவில்லை
எனும் போது, வேறு பள்ளிகளில் சேர்ப்பது என்பது இயலாத ஒன்று. இதனால்,
பலரும், இடைநிற்கும் அவலம் உருவாகியுள்ளது. இதை உடனடியாக, கல்வித்துறை
தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய காரணம்
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்
எண்ணிக்கையை விடவும், குறைந்த அளவே மாணவர்களை சேர்க்க முடியும்.
அதுமட்டுமல்லாமல், மேல்நிலைப் பள்ளிக்கு இணையாக உயர்நிலைப் பள்ளிகளும்
உள்ளன. அதில் படித்த மாணவர்கள், பிளஸ் 1 சேர்க்கைக்கு வரும் போது, போட்டி
இரு மடங்காகிறது.
ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே
மாணவர்களை சேர்க்க முடியும் என்பதால், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்
மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த நடைமுறை சிக்கல், கல்வித்துறை
அலுவலர்களுக்கும் தெரியும். தற்போது, 10ம் வகுப்பில் தேர்ச்சி
பெற்றவர்களில், 90 சதவீதம் பேர், பிளஸ் 1ல் சேருகின்றனர்.
'லேப்டாப்' மற்றும் சைக்கிள் வழங்குவதும்
முக்கிய காரணம். அதற்கேற்ப மேல்நிலைப் பள்ளிகளை விரிவாக்கம் செய்தால்
மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். ஏற்கனவே படித்த
பள்ளியிலேயே சேர்க்கவில்லை எனும் போது, வேறு பள்ளிகளில் சேர்ப்பது என்பது
இயலாத ஒன்று. இதனால், பலரும், இடைநிற்கும் அவலம் உருவாகியுள்ளது
10th science 6th lesson impratent questions
ReplyDelete