ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் TS EAMCET 2016 நுழைவுத்தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது
.முன்னதாக TS EAMCET 2016 நுழைவுத்தேர்வு மே 2-ம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி நுழைவுத்தேர்வு மே 15-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்க்கைபெறுவதற்காக பொது நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் இந்த பல்கலை நடத்தி வருகின்றது. 2016-17ம் கல்வியாண்டில் இளங்கலையில் பல்வேறு படிப்பில் சேர்க்கை பெறுவதற்காகவும், தெலங்கானாவில் உள்ள தனியார் பல்கலையில் சேர்க்கை பெறுவதற்காகவும் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொறியியல் பிரிவு: காலை 10 முதல் 1 மணி வரை விவசாயம் மற்றும் மருத்துவ பிரிவு: மதியம் 2.30 முதல் 5.30 வரை தேர்வு நடைபெறுகிறது. மே 15-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான நுழைவுச்சீட்டை மே 12 முதல் ஆன்லைனில் பெற்றுகொள்ளலாம். மே 27 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் விவரங்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...