ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்திருந்த நிலையில்
கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது சிறப்பாக வாதாடிய முதன்மை வழக்கறிஞர்.மாண்புமிகு.லஜபதிராய் அவர்கள் தடையாணையை உடைத்து எந்ததரபிற்க்கும் பாதிக்காதமுறையிலும் இனி ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப தடையேதும் இல்லை என ஆணை பெற்று நீதியை பெற்றுத்தந்தார். .
பின்பு கடந்த 9-5-16 அன்று சென்னைக்கு தோழர் .மதுரை ராஜ்குமார்,தலைமையில் திருமதி.சாந்தி மற்றும் திருமதி.ஹேமா, நண்பர்.பாஸ்கரன் மற்றும் சிலர் அன்றைய தினத்தன்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் சென்று கோரிக்கை மனுவுடன் வழக்கி நீதிமன்ற ஆணை அசல் சான்றை அங்குள்ள உயர் அதிகாரிகளின் பார்வைக்கு காண்பித்து பின் வழக்கை பின் தொடரும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர் பின் அவர்கள் தங்களிடம் TRB தேர்வுபட்டியல் வெளியிட்டால் நாங்கள் எங்கள் பணியை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.பின் அங்கிருந்து தலைமைச்செயலகம் சென்று திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து மனுவுடன் வழக்கின் சான்றிதழ் நகலும் வழங்கப்பட்டது அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தொரிவித்தார்.
பின் அங்கிருந்து TRB அலுவலகம் சென்று TRB உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்து அவர்களிடமே நீதிமன்ற ஆணை அசல் உண்மை சான்றிதழ் வழங்கப்பட்டது.அவர்களிடம் நம் நிலைகுறித்தும் விளக்கப்பட்டது.பின் அவர்கள் விரைவில் முழுமையான தேர்வுபட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்கிறோம் என உறுதியளித்தனர்
ஆகவே ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் மீதமுள்ள 30%சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப்பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது...
Article by
P. Rajalingam Puliangudi
is there only candidates which belongs to sc or st have worked adi dravidar schools
ReplyDelete?