Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CELL NUMBER HIDING TECHNICAL

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!
        ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது
அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை.
அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடையமொபைல் நம்பர் தெரிவதற்கு பதில்Private Number என் று மட்டும் வரும். உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில்தெரியாது.
உங்களுடை மொபைல் நம்பர் 9876543210 எனில்
அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.
இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண் *67 9876543210 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களு டைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார் கள்.
இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது. மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.
இதே முறையை இப்படி யும் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர்கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங் கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது.
அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.
மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென
நினைத்தால், மீண்டும்கஸ்டமர்கேருக்கு போன்செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த வசதி மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number)  என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார். எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வச தியைப் பயன்படுத்தி தவறான நடவ டிக்கைகளில், தவறான வழி முறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள்.
பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங் களுடைய எண்
மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive