Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நாற்றம்


பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நாற்றம்
New health insurance-ன் குறைகளை சுட்டிக்காட்டி நான் செய்த பதிவினைப் பார்த்த CPS போராளி திண்டுக்கல் திரு.பிரெடரிக் ஏங்கெல்ஸ் ( Frederic Engels ) அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..

அவர் கடந்த 2013-2015 வரை மூன்று அறுவை சிகிச்சைகள் new health insurance திட்டத்தில் செய்ததாகவும் , 
ஒரு ரூபாய் கூட தான் மருத்துவமனைக்கு செலுத்தவில்லை எனவும் கூறினார்..
எனக்கு அதிர்சியாக இருந்தது.
பிறகு தான் அவர் முழுவிவரத்தையும் கூறினார்..
அவரது அறுவை சிகிச்சைக்கான claim report reject ஆகிவிட்டதாம்.
அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் 15,000 பணம் கட்டினாராம்.
சிகிச்சை முடிந்த பிறகு
இணையதளம் மூலமாக இன்சூரன்ஸ் கம்பெனியின் regional nodal officer phone நம்பரை எடுத்து , அவரை தொடர்புகொண்டு...
அவர் பேசிய விபரம் கீழே..
( # குறியீடு CPS போராளி திரு.ஏங்கெல்ஸ் பேசியது.     
* குறியீடு nodal officer கூறிய பதில்)
# (ஏங்கெல்ஸ் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு) 
சார் எனது claim reject ஆகிவிட்டது..
ஏன் இந்த சிகிச்சைக்கு claim கிடையாது..?
* சார் அது ஒரு சில மருத்துவமனைக்கு மட்டுமே உண்டு..
# அப்புடினு நீங்க guideline எதுவும் விட்டுறுக்கீங்களா...? என்ன??
நான் அமைப்பில் இருக்கேன்.
எனக்கு claim ஆகலனா hospital முன்னாடி என் அமைப்ப வச்சி போராட்டம் செய்வேன்.
Media-வ கூப்பிட்டு இதை issue ஆக்குவேன்.
* சார் நான் ஒரு meeting-ல இருக்கேன். Meeting முடிஞ்சி கூப்பிடுறேன்னு சொல்லீட்டு வச்சிட்டாறாம்.
பிறகு அவருக்கு 50% claim ஆகிவிட்டதாம்..
பிறகு மீண்டும் இரண்டாவது முறை claim அனுப்பிவிட்டு, nodal officer-ஐ தொடர்புகொண்டு 50% மட்டுமே எனக்கு claim ஆகியுள்ளது ஏன் என்று கேட்டுள்ளார்..
* இந்த சிகிச்சைக்கு இவ்வளவு தான் சார் என்று பதில் கூறியுள்ளார் officer
# எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்று ஏதேனும் வெளியிட்டுள்ளீர்களா இல்லை அரசாணை எண் 242-ல் தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதா...?
எந்த அடிப்படையில் 50% தான் என்று கூறுகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்ட பிறகு
100% claim கிடைத்துள்ளது..
முதலில் கட்டிய 15,000 பணத்தையும் திரும்பப் பெற்றுவிட்டாராம்..
இப்படியே fight செய்து அடுத்த இரண்டு முறையும் 100% claim-ல் சிகிச்சை பெற்றுள்ளார்.
************"**************
இவ்வாறு கூறிய அவர்.
நீங்க discharge ஆவதற்கு முன்பே பேசியிருந்தால் கண்டிப்பா 100% claim பெற்றிருக்கலாம்..
எதற்கும் பேசிப்பாருங்கள் என்று nodal officer-ன் கைபேசி எண்ணை அளித்தார்..
நானும் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு பேசினேன்..
அந்த சிகிச்சைக்கு 40 to 50% தான் package என்று கூறினார்.
நான் அமைப்பில் உள்ளேன் என்று கூறிய உடன் discharge ஆன பிறகு எதுவும் செய்ய இயலாது சார் thank u என்று கூறி அவசரமாக வைத்துவிட்டார்..
இப்படி போராடியா மருத்துவ காப்பீட்டு உரிமையை ஒவ்வொருவரும் பெற முடியும்..
சொல்வாக்கு உள்ளவர்களும், போராட்ட குணம் உடையவர்களும் போராடிப் பெற்றுவிடலாம்..
ஆனால்,
சாமானியரின் நிலை..????
வரும் ஜூன் மாதத்துடன் New health insurance company உடனான ஒப்பந்தம் முடிவடைகிறது..
ஜூலை முதல் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாமல் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்துமாறு கோரிக்கையை முன்வைப்போம்..
-இவண்
தேவராஜன்,
தஞ்சாவூர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive