புது தில்லி :அலைபேசி அழைப்புகள் தானாக துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்குவதை கட்டாயப்படுத்திய டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அழைப்பு முறிவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க வலியுறுத்தும் டிராய் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...