சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை, எம்பில் மற்றும் டிப்ளமா, சான்றிதழ்
படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் 86 துறைகள் இயங்கி
வருகின்றன. இவற்றில் 92 பாடப்பிரிவுகளில் எம்ஏ, எம்எஸ்சி படிப்புகளும்,
எம்பில் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளும்
வழங்கப்படுகின்றன.2016-2017-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான
அறிவிப்பினை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதுகலை, எம்பில் படிப்புகளுக்கு ஜூன் 15-ம் தேதி வரையிலும், அதேபோல், முதுகலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 29-ம் தேதி வரையிலும் ஆன்லைனில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மதிப்பெண் (50 சதவீதம்) மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் (50 சதவீதம்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.எம்பில் படிப்புக்கான நுழைவுத்தேர்வை உத்தேசமாக ஜூன் 22 முதல் 30-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். எம்பில் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது.
வழங்கப்படும் பல்வேறு விதமான படிப்புகள், மாணவர் சேர்க்கை நடைமுறை, ஒவ்வொரு படிப்புக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதி முதலானவிவரங்களை சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...