கோவையைச் சேர்ந்த எம்.முகமது அக்பர் பாஷா. இவர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு காவலாளியாக பணியில் சேர்ந்தார்.
பின்னர், அலுவலக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
இவர் விடுமுறை நாள்களிலும் வீட்டு வேலை செய்ய நீதிபதிகள் பணித்தாகக் கூறி 2014-ஆம் ஆண்டு ஜனவரி 31-இல் பணி விலகல் கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில், குடும்பச் சூழல்-மன உளைச்சல் காரணமாக பணி விலகியதை கருத்தில் கொண்டு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முகமது அக்பர் பாஷா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் சதிஷ் கே.அக்னிஹோத்ரி, எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
பணி விலகிய ஒருவருக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக சட்டத்தில் இடமில்லை.
மனுதாரர் இதே கோரிக்கையை வலியுறுத்தி, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திலும் முறையிட்டுள்ளார். எனவே, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...