அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தேர்தல் தேதி
அறிவிக்கப்பட உள்ளது.
பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி தேர்தல்
ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஜூன்
13ம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்த தேதிக்கு
பதிலாக வேறு தேதியை தேர்தல் ஆணையம்விரைவில் அறிவிக்க உள்ளது.
மேலும், இவ்விரு தொகுதிகளிலும் ஜூன் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்கூட்டியே தேர்தல் நடத்த தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் அதிமுக, திமுக கட்சிகள் செய்த பரிந்துரையை அடுத்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
இவ்விரு தொகுதிகளுக்கும் புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு இடைத்தேர்தல் போல நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ரத்து செய்யப்பட்டு புதிதாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிமாறுதல் கலந்தாய்வு எப்போது என்ற தகவல் கிடைத்தால் பகிரவும்
ReplyDelete