மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனில் பரிந்துரைத்ததை காட்டிலும் அதிகப்படியான சம்பள உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை உயர்த்துவதற்காக 7வது சம்பள கமிஷன் நீதிபதி ஏ.கே.மாத்துார் தலைமையில் மத்திய அரசு நியமித்தது.
அந்த கமிஷன், மத்திய அரசு பணியாளர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 18 ஆயிரமாகவும், அதிகபட்சமாக 2 லட்சத்து 50ஆயிரமாக உயர்த்தவேண்டும். அடிப்படை சம்பளத்தை குறைந்தது 14.27 சதவீதம் உயர்த்த வேண்டும். ஒட்டுமொத்தமாக மத்திய அரசு பணியாளரின் சம்பளம் 23.55 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்த அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில், 13 செயலாளர்கள் கொண்ட உயர்நிலைக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தைவிட கூடுதலாக செயலர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதித்துறை செயலர்கள் கூறியதாக வெளியான தகவலில்,‘7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை ஆராய்ந்த செயலர்கள் உயர்நிலைக்குழு, மத்திய அரசு பணியாளர்களின் சம்பளம் அதிகபட்சம் 2 லட்சத்து 70 ஆயிரமாகவும், குறைந்தபட்ச சம்பளம் 21 ஆயிரமாக இருக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு அமல்படுத்தப்படும். அனேகமாக ஜூலை மாதம் அமலாகலாம். உயர்நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்கப்பட்டால், 2016 ஜனவரி மாதத்தில் இருந்து புதிய சம்பளம் அமல்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...