Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியருக்கு வெட்டு: மாணவன் கைது

சரியாக படிக்காததால் தட்டிக்கேட்ட ஆசிரியரை, கத்தியால் வெட்டிய மாணவன் கைது செய்யப்பட்டான்.வேலுார் மாவட்டம், திருப்பத்துார், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 52; ராமகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.இதே பள்ளியில், ஜார்ஜ்பேட்டையைச் சேர்ந்த, 16 வயது மாணவன் ஒருவன், பிளஸ் 1 தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 செல்ல இருக்கிறான். 

      அந்த மாணவன், ஆசிரியர் பாபுவிடம் டியூஷன் படித்து வந்தான். சரியாக படிக்காத அந்த மாணவனை, ஆசிரியர் பாபு பலமுறை திட்டியுள்ளார். ஆனால், டியூஷனிலும் சரியாக படிக்காததோடு, அங்கு வந்த ஒரு மாணவியை கேலி செய்துள்ளான். இதனால் ஆசிரியர் பாபு, மாணவனை திட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 6:30 மணியளவில் வழக்கம்போல் ஆசிரியர் பாபு, அப்பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வழியில் நின்றிருந்த அந்த மாணவன், ஆசிரியருக்கு வணக்கம் தெரிவிப்பது போல் பாவ்லா காட்டிவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினான். இதில், ஆசிரியர் பாபுவின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பாபு கூச்சலிட்டார்; அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அங்கு, கத்தியோடு நின்றிருந்த மாணவனை பிடித்து, தர்ம அடி கொடுத்து, திருப்பத்துார் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
 

        ஆசிரியர் பாபு புகாரை அடுத்து மாணவனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive