தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும்திருப்பரங்குன்றம்
சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்
கமிஷன் ஆலோசித்து வருகிறது.இத்தகவலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் மே 16ல் நடந்தது. தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிக அளவில் நடந்ததாக புகார் எழுந்ததால் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் மே, 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்பின் ஜூன் 13க்கு தள்ளிவைக்கப்பட்டது. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில் இன்றைக்குள் தேர்தலை நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்க மறுத்த தேர்தல் கமிஷன் இரு தொகுதிகளின் தேர்தலையும் ரத்து செய்தது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவித்துள்ளது.இதற்கிடையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் உடல்நலக் குறைவால் இறந்தார். இத்தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல்நடத்தியாக வேண்டும்.எனவே தேர்தல்ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் திருப்பரங்குன்றம்இடைத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ரிசர்வ் போலீசார்
தமிழகத்தை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்றால் அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிடுவர்.பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும்.இம்முறை தி.மு.க., 89 எம்.எல்.ஏ.,க்களுடன் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே அக்கட்சியும் மூன்று தொகுதிகளிலும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் தேர்தல் பணிக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. எனவே அதை எப்படி தடுக்கலாம் என தேர்தல் கமிஷன் தீவிரமாக யோசித்து வருகிறது.மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் அந்த தொகுதிக்குள் செல்ல தடை விதிப்பது; தமிழக அரசு ஊழியர்களுக்கு பதிலாக வெளி மாநில ஊழியர்களை அழைத்து வந்து தேர்தலை நடத்துவது; தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாரை ஈடுபடுத்தாமல் மத்திய ரிசர்வ் போலீசாரை பயன்படுத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
ஒரே நேரத்தி்ல் தேர்தல்
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிகூறியதாவது:
மூன்று தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் என்பதை தலைமை தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும். தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பார். மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மற்ற தொகுதிகளை பொறுத்தவரை அந்த கட்டாயம் இல்லை. எனவே மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதா; தனித்தனியே நடத்துவதா என்பதையும் தேர்தல் கமிஷனே முடிவு செய்யும்.இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.
வேட்பாளர்கள் தகுதி நீக்கம்?
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் சில வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனுக்கு தெரிய வந்துள்ளது. பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.அதை ஏற்று பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்து அவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிப்பது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...