Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள், பி.எஃப்.எஸ்சி பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை துணைவேந்தர் பேராசிரியர்செ.மணியன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், சிண்டிகேட் உறுப்பினர் கே.கதிரேசன், புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம், ராஜேந்திரன், கல்வி திட்ட இயக்குநர் மணிவண்ணன், நெறி முறை அலுவலர் டி.ரங்கசாமி, ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலகமேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: பிஇ, பிஎஸ்சி வேளாம்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 year Integrated Coureses), பி.எஃப்.எஸ்சி (Batchalor of Fisheries Science) ஆகிய படிப்புகளுக்கு ஆன்மூலம் விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி 10-6-2016 ஆகும். பிஇ பட்டப்படிப்பில் சிவில், சிவில் அன்ட் ஸ்டெர்க்சரல், மெக்கானிக்கல், மேனுபேக்கசரிங் இன்ஜினியரிங், எலக்டிர்கல் எலக்டிரானிக்ஸ், எலக்டிரானிக் கம்யூனிக்கேஷன், எலக்டிரானிக் இன்ஸ்டிருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், தகவல்-தொழில்நுட்பம் ஆகிய 12 பிரிவுகளுக்கு மொத்தம் 810 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர்.பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும்,  பேட்சுலர் ஆஃப் பிஷ்ஷரிஸ் சயன்ஸ் (B.F.Sc) படிப்பிற்கு 30 பேரும், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளான 25 படிப்புகளுக்கு தலா 30 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். தமிழகஅரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவர்கள் அனுமதிசேர்க்கை செய்யப்படுவார்கள்.

மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பி.எஃப்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பம் விலை ரூ.800, எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.400. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப விலை ரூ.400. எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.annamalaiuniversity.ac.in என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive