கடந்த ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவ,
மாணவியருக்கு வினியோகிக்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்', இந்த ஆண்டு
தாமதமாக தான் கிடைக்கும் என, தெரியவந்து உள்ளது.
இது தொடர்பாக, அதிகாரிகளிடையே பல குழப்பம்
நிலவி வருகிறது.கடந்த, 2011ல் ஆட்சியில் அமர்ந்த போது, மாணவர்களுக்கு இலவச,
'லேப் - டாப்' திட்டத்தை அ.தி.மு.க., அரசு அமல்படுத்தியது. ஐந்து ஆண்டு
காலத்தில், 4,331 கோடி ரூபாயில், 32 லட்சம் லேப் - டாப்கள்
வினியோகிக்கப்பட்டன.
இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங்கள் பின்பற்ற துவங்கின.தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்க வெகு சில நாட்களே இருக்கும் நிலையில், இலவச லேப் - டாப் பற்றிய எந்த முடிவும் எடுக்கப் படாமல் உள்ளது. ஆட்சிக்கு மீண்டும் வந்திருக்கும் அ.தி.மு.க., அரசு, அது பற்றிய உறுதியான முடிவை எடுக்காததே அதற்கு காரணம். இதற்கான உத்தரவு ஏதும் அரசிடம் இருந்து அதிகாரிகளுக்கு வராததால், லேப் - டாப் வினியோகம் தாமதமாகும் என, தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து, தமிழக தகவல்தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:அ.தி.மு.க., வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவச, லேப் - டாப்புடன், இலவச இணைய சேவை வழங்கப்படும்' என, கூறப்பட்டு இருந்தது.
இலவச லேப் - டாப் மட்டும் என்றால், கொள்முதல் பணி இந்த நேரம் துவங்கி இருக்கும். ஆனால், இலவச லேப் - டாப்புடன் இணைய வசதி என, கூறப்பட்டுள்ள தால் சற்று குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, அரசு கொள்கை முடிவை எடுத்து, அந்த கோப்புகள் நிதித்துறைக்கு சென்று திரும்பிய பின்னரே, அது தொடர்பான உத்தரவு வெளியிடப் படும். அதனால், இந்த ஆண்டு, இலவச லேப் - டாப் பெற மாணவர்கள், சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இலவச இணைய இணைப்பு எப்படி:'மாணவர் களுக்கு, லேப் - டாப்புடன் இலவச இணைய இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இணைய வசதிக்காக, லேப் - டாப்புடன், 'சிம் கார்டு' பொருத்தக்கூடிய, 'டாங்கிள்' எனும், 'டேட்டா கார்டு' வழங்கப்படும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், லேப் - டாப்பிலேயே, சிம்கார்டு பொருத்தி வழங்கும் நடைமுறை பின்பற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இணைய இணைப்பு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் வாங்கப்படுமா அல்லது தனியாரிடம் வாங்கப்படுமா என்ற குழப்பமும் நிலவுகிறது.இதுதவிர, லேப் - டாப்களை, சப்ளை செய்யும் நிறுவனத்திடமே இணைய வசதி இணைப்பை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பை தந்து விடலாமா, என்ற யோசனையும் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...