'அக்னி நட்சத்திரம் என்ற கடும் கோடை காலம், இன்று துவங்கி மே, 28ம்
தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும் இயல்பை விட, 3 டிகிரி, 'செல்சியஸ்'
வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது:
தமிழகத்தில், வெப்பசலனம் மூலம், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. அடுத்த, இரண்டு நாட்களுக்கு ஈரப்பதம்
குறைந்த வெப்ப காற்று வீசும் என கணிக்கப்பட்டு உள்ளது. எனவே, தமிழகம்
முழுவதும் இயல்பை விட, 2 - 3 டிகிரி, 'செல்சியஸ்' வெப்பம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...