தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அவர்களின் அடிப்படை தேவைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தற்போது வாட்ஸ் அப்பில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக செய்தி ஒன்று பரவி வருகிறது.அதில், தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற நமக்கு தேர்தல் ஆணையம் ஊதியம் வழங்குகிறது, ஆனால் உணவு வழங்குகிறதா?. இரண்டு நாட்கள் தேர்தல் பணி புரிகின்ற நமக்கு உணவு கிடைக்க என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது.? இதற்கு எந்த அலுவலர் பொறுப்பேற்கிறார்..?தேர்தல் பணி பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்திவைப்பதற்கு உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கும்போது, நமது அடிப்படை வசதியான உணவும், குடிநீரும் தடையின்றி நமக்கு கிடைக்கச் செய்ய ஏன் தேர்தல் ஆணையம் வழி வகை செய்யவில்லை..?காலை 6 மணி முதல் இரவு பெட்டி எடுக்கும் வரை நாம் பணியாற்ற வேண்டும்.
இதில் சிறுநீர் கழிப்பதற்கோ, உணவு உண்பதற்கோ என்று இடைவெளி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா...? சிறுநீர் கழிக்க 5 முதல் 10 நிமிடம் காலை மற்றும் மாலையிலும் உணவு உண்ண 15நிமிடம் காலை மற்றும் மதியம் இரு வேளையும் ஏன் நமக்காக ஒதுக்கப்படக் கூடாது?நமக்கு உணவு ஏற்பாடு செய்து தரப்போவது யார்? நமக்கு யாரும் இலவசமாக உணவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சுகாதாரமான உணவும், குடிநீரும் தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா..?நம்மில் எத்தனை பேர் நல்ல உணவு கிடைக்காமலும் மற்றும் கிடைத்த உணவை உண்ண நேரமில்லாமலும் இன்னும் எத்தனை தேர்தல்களில் பட்டினியாக பணியாற்றுவது? இனியும் தொடர வேண்டுமா இந்த அவலம்?
7-5-16 மற்றும் 12-5-16 பயிற்சிகளின் போது அனைத்து ஆசிரியர்களும், தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பயிற்சி மையங்களிலும் நமது இந்த இரண்டுகோரிக்கைகளை நிறைவேற்ற நாம் ஒன்றிணைந்து வலியுறுத்துவோம்..
* உணவும், குடிநீரும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* உணவு இடைவேளை மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க இடைவேளை அளிக்க வேண்டும்.
* பெண் ஆசிரியர்களை அந்தந்த தொகுதிகளுக்குள்ளேயே நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆணையம் கவனிக்குமா?
நியாயமான கோரிக்கைகள்
ReplyDeleteஆணையம் ஆவண செய்ய வேண்டும்
மனித உரிமை பேசும் மேதைகள் எங்கே போனார்கள் ?
ReplyDelete