சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில், இயக்கப்படும் மெட்ரோ ரயில்
கட்டணத்தை முறைப்படுத்த, புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதற்கான பணிகளை,
மத்திய அரசு துவக்கி உள்ளது.சென்னை போன்ற பெருநகரங்களில், மக்கள் தனி வாகன
பயன்பாட்டைக் குறைத்து, பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த தேவையான
நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விரைவான பொது போக்குவரத்து சேவையை வழங்க, பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது.தற்போதைய நிலவரப்படி, சென்னை, டில்லி, மும்பை உட்பட, ஆறு நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டு உள்ளது.
கட்டணம்: சென்னையில், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த, 10 கி. மீ., தொலைவுக்கு, 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதர பொது போக்குவரத்து சேவையுடன் ஒப்பிடுகையில், இந்த கட்டணம் மிக அதிகம் என, மக்களிடம் கருத்து நிலவுகிறது.பிற நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை துவக்குவது குறித்து பேசும் போது, பயணக் கட்டணம், மக்களின் வருவாய் நிலைக்கு ஏற்றதாக உள்ளதா என யோசிக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
இதை கருத்தில் கொண்டு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம், டில்லியில் அண்மையில் நடந்தது. அதில், கட்டண வேறுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ரயில்வே போல், நாடு முழுவதும், ஒரே மாதிரியான கட்டணத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது, கட்டணம், சேவை குறித்த புகார்கள், நிர்வாகச் சிக்கல்கள் போன்ற பிரச்னைகளை தீர்க்க, மெட்ரோ ரயிலுக்கு தேசிய அளவில் ஒழுங்கு முறை ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...