தமிழ்நாடு
தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
இங்கு, பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை படிப்புகள், சென்னை
பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகின்றன.அத்துடன்,
பி.ஜி.டி.எல்.ஏ., எனும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு,
மாலை நேர பட்டயப் படிப்பு;
டி.எல்.எல்.,
மற்றும் ஏ.எல்., எனப்படும், தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும்
என்ற பட்டயப் படிப்பு - வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு மட்டும்,
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றன.பிளஸ் 2 முடித்த
மாணவர்கள், பட்டப் படிப்பிற்கும்; ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள்,
முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் வந்து
சேர வேண்டும்.
சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், நேரடியாக விண்ணப்பத்தை பெறலாம். தபாலில் பெற விரும்புவோர், 250 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, 'இயக்குனர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், சென்னை - 5' என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 9841192332, 9884159410, 044 - 28440102, 28445778 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...