பாரதியார் பல்கலையில் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும் முதுகலை
படிப்புக்கு வரும், 31ம் தேதி வரையும், நேரடி சேர்க்கை படிப்புக்கு ஜூன்,
15ம் தேதி வரையும் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பாரதியார்
பல்கலையில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம்
வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் நலன்கருதி நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும் முதுகலை படிப்புக்கு வரும், 31ம் தேதி வரையும், நேரடி சேர்க்கைக்கான படிப்புக்கு ஜூன், 15ம் தேதி வரையும் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள், www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்திசெய்த விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணமாக இதர பிரிவினர், 300 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 150 ரூபாய்க்கான டி.டி., அல்லது பாங்க் ஆப் இந்தியா ரசீதுடன் இணைத்து சம்பந்தப்பட்ட துறை தலைவரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். இறுதி பருவத்தேர்வெழுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை பல்கலையில்பெற உரிய விண்ணப்ப கட்டணத்தை டி.டி., அல்லது பாங்க் ஆப் இந்தியா ரசீதாக செலுத்தி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பதிவாளர், பாரதியார் பல்கலை என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாட மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலையில் கலந்தாய்வு மூலம் நடக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...