‘ஸ்லெட்’ தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஆர் நெட் தேர்வுகளைப் போன்று இல்லாமல் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கீ ஆன்சரை பார்க்க முடியும்.
தமிழகத்தில் மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
57 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையதளத் தில்(www.setexam2016.in) வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஐஆர் அமைப்புகள் நடத்தும் அகில இந்திய அளவிலான நெட் தேர்வைப் போல் அல்லாமல் தேர்வர்கள்மட்டும் உத்தேச விடைகளை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (நெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும்). தேர்வர்கள் தங்கள் பதிவெண், மொபைல் எண், இ-மெயில் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு கீ ஆன் ஸரை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் குறித்து கொடைக்கா னல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளரும், ஸ்லெட் தேர்வுக் குழு செயலாளரு மான பேராசிரியை என்.கலாவிடம் கேட்டபோது, “தற்போது கீ ஆன்ஸர் வெளி யிட்டுள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரி களுடன் கலந்தாலோசனை செய்து விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.
it is difficult to download the answer key and question paper.why not they set in the PDF formate?
ReplyDeleteI use mobile chorme Browser pdf file downloaded.
Delete