Home »
» அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்
திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில்
முடிக்கப்பட்டு, ஜூன் 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகம்
முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17ஆம் கல்வியாண்டு
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட
உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ.
27 செலுத்தி, விண்ணப்பத்தைப் பெறலாம். முன்கூட்டியே மாணவர் சேர்க்கை: பிளஸ்
2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும்
வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல்
விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் சேர்க்கையும்
நடத்திமுடிக்கப்பட்டது. அதுபோல நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப
விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு
கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன. ஜூன் 16-ல் கல்லூரி திறப்பு: விண்ணப்ப
விநியோகம் பிளஸ்-2 முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை
விநியோகிக்கப்பட உள்ளன. பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்த
10 நாள்களில் தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும்.
ஜூன் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, 16-ஆம் தேதி முதல்
வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...