பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் பெரிய வள்ளிக்குளம்
நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர். சிவகுமார் 499 மதிப்பெண்
பெற்று முதலிடம் பிடித்தார்,இவர் தமிழில் 99, மற்றபாடங்களில் ௧௦௦
மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. தற்போது
விருதுநகரில் வசிக்கிறார்.அவர் கூறியதாவது:
பள்ளியில் எனது உழைப்பை விட ஆசிரியர்களின் உழைப்பு அதிகமாக இருந்தது. ஆசிரியர்கள் பள்ளி தொடங்கியது முதலே மாநில அளவில் சாதிப்பதற்கான டிப்ஸ் கொடுத்தனர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக எழுத்துப் பயிற்சி எடுத்து கொண்டேன். பெற்றோர் எனக்காக நேரம் ஒதுக்கி படிப்பில் சாதிக்க ஒத்துழைப்பு அளித்தனர். வீட்டிலே எனக்கு தேர்வு வைத்தனர். மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பேன். பார்க்கும் இடமெல்லாம் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என எழுதி வைத்து கொள்வேன். அந்த கனவு நனவாகி விட்டது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.எக்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரேமசுதாவும் ௪௯௯ மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.இவர் தமிழ் பாடத்தில் 99, மற்ற பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றார். திண்டுக்கல் பங்காருபுரத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோர் ராஜேந்திரன், ரேணுகாதேவி. இவர் 8ம் வகுப்பு வரை ஒட்டன்சத்திரம் அட்சயா அகாடமி பள்ளியிலும், படித்தார்.அவர் கூறியதாவது:பள்ளியில் விடுமுறை எடுப்பதை முற்றிலும் தவிர்த்தேன். அதிகாலை நேரங்களில் படித்தேன். வீட்டுப்பாடங்களை செய்யத் தவறியதே இல்லை. 'டியூஷன்' சென்றதும் கிடையாது. சித்தப்பா சீனிவாசன், சித்தி சுஜாதா, பள்ளி முதல்வர் சிவராமகிருஷ்ணன் பெரும் உந்துதலாக இருந்தனர். பாடத்தில் சந்தேகம் வந்தால் ஆசிரியர்கள், சகோதரி, தோழிகளிடம் கேட்டு தெளிவு பெறுவேன். அதை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வேன். பின், படித்து மனதில் பதிய வைப்பேன். தோழிகளிடம் பாட விபரங்களை பேசுவதை பழக்கப்படுத்தினோம். அந்த பயிற்சியும் அதிக மதிப்பெண் எடுக்க உதவியது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...