தமிழகத்தில்
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.),
பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்,
பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கு
வெள்ளிக்கிழமை (மே 20) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்
எஸ்.திலகர் கூறினார்.
எத்தனை
இடங்கள்?: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக்.
உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித்
தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப்
படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
ஜூன்
10-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதல்
கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலம் சமர்ப்பிக்க
வேண்டும். அதனைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட்
எடுத்து, தபால் மூலம், ஜூன் 17-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: துணைவேந்தர் அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...