'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு
வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம்
கூட இடம்பெறவில்லை.
இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம்
பின்தங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தை சேர்ந்த, 12 நகரங்கள் உட்பட,
நாடு முழுவதும், 98 நகரங்களை மத்திய அரசு,' ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு
தேர்வு செய்தது.
விரைவாக திட்ட அறிக்கை
சமர்ப்பிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதல், 20 நகரங்களின் பட்டியல் ஜன.,
28ல் வெளியிடப்பட்டது.சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள்இதில் பின்தங்கிய
நிலையிலேயே இருந்தன. அடுத்த, 13 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு, நேற்று
வெளியிட்டது. இதில், ஒரு இடத்தை கூட தமிழக நகரங்கள் பெறவில்லை.
காரணம்என்ன?:
முதல் பட்டியலில் பின் தங்கியதற்கு, மழை வெள்ளம் பாதிப்பை காரணமாக கூறிய தமிழக அதிகாரி கள், தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததை காரண மாக கூறுகின்றனர். 2015 ஜூன் மாதம், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மத்திய அரசே, இதற்கான கலந்தாலோசனை நிறுவனங்களை பரிந்துரைத்தும், தமிழக நகரங்களின் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு முழு காரணமாககூறப்படுகிறது. முதல்கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியலில், பா.ஜ., தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
2வது பட்டியலில் தேர்வான நகரங்கள்
1. லக்னோ, உத்தர பிரதேசம் 2. பாகல்பூர், பீஹார்3. நியூடவுன், கோல்கட்டா, மேற்கு வங்கம்4. பரிதாபாத், ஹரியானா5. சண்டிகர்6. ராய்ப்பூர், சத்தீஸ்கர்7. ராஞ்சி, ஜார்க்கண்ட்8. தர்மசாலா, இமாச்சல பிரதேசம்9. வாரங்கல், தெலுங்கானா10. பனாஜி, கோவா11. அகர்தலா, திரிபுரா12. இம்ப்பால், மணிப்பூர்13. போர்ட்பிளேர், அந்தமான் - நிகோபர் தீவுகள்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...