"யாருக்கு
வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை சென்னை மாவட்டத்
தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அண்ணா நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்படும் இந்த இயந்திரங்களின் மூலம், வாக்களிப்போர் தாங்கள் யாருக்கு அளித்தார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இந்த இயந்திரங்களை சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, அவர் கூறியதாவது:-
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்படும். மே 15-ஆம் தேதி மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த தொகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மே 16-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 12 கோடியே 40 லட்சம் பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது மத்திய தேர்தல் பார்வையாளர் (பொது) ராணி ஜார்ஜ், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் சுபோத்குமார், ஆர்.கண்ணன். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கே.பிரியா, பி.குமரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...