பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளின் தொலை
நிலைக்கல்வி சான்றிதழ்கள், அரசு வேலை வாய்ப்புக்கு செல்லத்தக்கவை' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யு.ஜி.சி., சார்பில் அனைத்து மாநில
பல்கலைகளுக்கும் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது.
அதன் விவரம்:மத்திய மனிதவள அமைச்சகம் மூலம், 2015 ஜூலை, 27ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, பார்லிமென்டில், 1956ல் கொண்டு வரப்பட்ட யு.ஜி.சி.,சட்டத்தின்படி அமைக்கப்பட்ட பல்கலைகளால் தொலைநிலையில் வழங்கப்படும், டிப்ளமோ, டிகிரி மற்றும் சான்றிதழ் படிப்பு சான்றிதழ்கள், அரசின் வேலைவாய்ப்புக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.இந்த அரசாணைக்கு முன், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படி, தொலை நிலை கல்வி கவுன்சிலின் அனுமதியுடன் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லத்தக்கவை.ஆனால், பல பல்கலைகள், தனியார் அமைப்புகள் மூலம் தொலைநிலைகல்வியை நடத்தின. இதுகுறித்து, 2001ம் ஆண்டே பல பல்கலைகள் எச்சரிக்கப்பட்டன.
மாநில பல்கலைகள் தங்கள் மாநிலத்தை விட்டும், தனியார் பல்கலைகள் தங்கள் பல்கலைவளாகத்தை விட்டும் வெளியே மையம் அமைத்து, தொலைநிலை கல்வி தரக்கூடாது.எனவே, 'தனியார் ஏஜன்ட்கள் மூலம் தொலைநிலை கல்வியை அனுமதிக்க வேண்டாம்' என, எச்சரிக்கப்பட்டது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளதால், அனைத்து மாநில அரசுகளும், தங்கள் மாநிலங்களில்,பல்கலைகள் விதி மீறாமல் நடந்து கொள்ளும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். யு.ஜி.சி., வகுத்த எல்லைகளை மீறாமல், பல்கலைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...