எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்
எம்.பி.பி.எஸ்.,
உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில்
இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லைஎன்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.
'இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும்' என, தொடரப்பட்ட வழக்கில், 'மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதி களில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவி லான பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள், இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்க் கையை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த முறையிலேயே மாணவர்
சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டுமென, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டு, மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்நிலையில், தேசிய பொது நுழைவுத் தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், இம்மாதம், 20ம் தேதி அவசர சட்டத்தை மத்திய அரசுகொண்டு வந்தது.இது தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சில விளக்கங்களை கேட்டிருந்தார். அதன்படி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள், ஜனாதிபதியின் கேள்விக்கு விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத் துள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமைச்சர் விளக்கம்:இந்த அவசர சட்டம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு, நடைமுறையில் உள்ளது
* தேசிய அல்லது மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் ஏதாவது ஒன்றை நடத்திக் கொள்வ தற்கு, இந்த ஆண்டு மட்டும், மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகி றது.
* தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்
* ஜூலை, 24ம்தேதி திட்டமிட்டபடி, இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடக்கும்
* தனியார் கல்லுாரிகள், பல்கலைகள், தேசிய நுழைவுத் தேர்வின்படியே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீடு போன்ற அனைத்தும் தேசிய நுழைவுத் தேர்வு மூலமே நிரப்பப்பட வேண்டும்
* தனியார் கல்லுாரிகளில், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டை, தேசிய அல்லது மாநில நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பிக் கொள்ளலாம்
* இந்த ஆண்டு டிசம்பரில் நடக்கும், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும்
* அடுத்த ஆண்டு முதல், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், தேசிய நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
21வது அவசர சட்டம்:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு, இரண்டாண்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ள, 21வது அவசர சட்டம் இதுவாகும்.
ஓரிரு நாளில் விண்ணப்பம்:தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு தயாராகி வருகிறது. ஓரிரு நாளில், விண்ணப்பங்கள் வினியோகம் துவங்கும்.இது குறித்து மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாண வர் சேர்க்கை நடத்த வேண்டும்; எப்போதும், பொது நுழைவுத்தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. சிக்கல்கள் தீர்வதால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும்; விண்ணப்ப படிவங்கள் ஓரிரு நாளில் வழங்கப்படும்,'' என்றார்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்; எப்போதும், பொது நுழைவுத்தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. சிக்கல்கள் தீர்வதால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும்; விண்ணப்ப படிவங்கள் வினியோகம் ஓரிரு நாளில் துவங்கும்.ஜெ.ராதாகிருஷ்ணன் , தமிழக சுகாதாரத் துறை செயலர்
பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்:நான், மாநில பாடத்திட்டத்தில் படித்தேன்; சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் படிக்காமல், 'நீட்' தேர்வு எழுதுவது சிரமம். அரசு பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.சி., பாடத்திட்டமாக நடைமுறைப்படுத்திய பின், 'நீட்' தேர்வை அனுமதிக்கலாம். அதுவரை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.க.சுகந்த், எம்.பி.பி.எஸ்., சேர காத்திருக்கும் மாணவர், சென்னை.
அவசர சட்டம் அவசியமானது:பிளஸ் 2 படிக்கும்போதே, டாக்டர் கனவோடு, அதற்கான, 'கட்-ஆப்' பெறும் வகையில் படிக்கின்றனர். திடீரென, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு என்றால், சி.பி.எஸ்.சி., மாணவர்களோடு எப்படி போட்டியிட முடியும். மத்திய அரசின் அவசர சட்டம் அவசியமானது. மாநில ஒதுக்கீடு இடங்கள் தவிர்த்து, பிற இடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதை வரவேற்கிறோம். எஸ்.தினேஷ், மருத்துவ மாணவர், திருவண்ணாமலை.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...