சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருவதை முன்னிட்டு, பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
பிரசாரம் முடிவடைந்து, வாக்குப் பதிவு தொடங்கவுள்ள (மே 16, காலை 7 மணி) நாள் வரையிலான 48 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களுக்கு சில்லறை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை தினமான மே 19 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 9,360-லிருந்து 6,300 ஆக்கப்பட்டுள்ளது. அதிகமாக பணம் செலவிடப்படும் முக்கியப் பிரமுகர்களின் தொகுதிகளாக 94 சட்டப் பேரவைத் தொகுதிகள் அறியப்பட்டுள்ளன. அதிலும், 25 தொகுதிகள் அதிமுக்கியத் தொகுதிகளாக உள்ளன.இவற்றில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம். ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள்: தேர்தல் பிரசார நேரத்துக்கு பின்னர் செய்தி வடிவிலோ, வேறு வகையான பிரசார படங்களையோ ஒளிபரப்பு செய்யக் கூடாது. அச்சு ஊடகங்கள் விளம்பரங்கள் வெளியிடத் தடை இல்லை. ஆனால், அந்த விளம்பரங்களுடன் பத்திரிகைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது. விளம்பரங்களை அகற்றி பத்திரிகைகளை பதிவேற்றம் செய்யலாம். மழை பாதிப்பு: மே 16- ஆம் தேதியன்று மழை பெய்தாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் பொம்மை இயந்திரம்: புதுச்சேரியில் இருந்து தயாரித்து தஞ்சாவூருக்கு எடுத்து வரப்பட்ட அட்டையிலான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிடிபட்டுள்ளன. இதுபோன்று இயந்திரங்களை விழிப்புணர்வு பிரசாரத்துக்காக பயன்படுத்தத் தடையில்லை. ஆனால், முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் எடுத்து வந்ததால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளியேற உத்தரவு: தொகுதிக்கு தொடர்பில்லாத பிறநபர்கள் அங்கியிருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. பிரசாரம் முடிவடைந்தவுடன், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...