'104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது.
எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில்
தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
பெற்றோர்
விழிப்போடு இருக்க வேண்டும். மாணவர்களை திட்ட வேண்டாம்; அது, எதிர்மறையான
விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
முடிந்த அளவு அவர்களை தேற்றுங்கள்;
முடியாவிட்டால், '104'ஐ அழையுங்கள்; வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பல
வாய்ப்புகள் குறித்து, ஆலோசனைகளை தருகிறோம். கடந்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியான அன்று, ஆலோசனை கேட்டு, 10 ஆயிரம் அழைப்புகள் வந்தன. இதை
கருத்தில் கொண்டு, இந்த முறை, அதிக அளவில் உளவியல் ஆலோசகர்களை
நியமித்துள்ளோம். மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம்.இவ்வாறு
அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...