பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களிடமிருந்து, கதை, கவிதை உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்ப, தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் நடைபெறும் நேரத்தில், இந்த
உத்தரவு ஆசிரியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் இதழுக்காக, மாணவர்களுக்குபயன்படும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சிறப்பாக செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்த விவரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்க, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவற்றை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சேகரித்து, மே 18ம் தேதி மாலைக்குள், மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.மாணவர்களுக்கு கோடை விடுமுறையும், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி மற்றும் பணியும் உள்ள நிலையில், கதை, கவிதை, துணுக்குகளைசேகரிக்கும் பணி, தலைமை ஆசிரியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...