சென்னை : வாக்குப் பதிவுகள் முடிந்த பின்னர், சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், Close பொத்தானை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடுவதில்லை எனவும் இந்த நடவடிக்கையால் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்ற ஐயம் எழுவதாகவும் கடந்த காலத்தில் புகார்கள் வந்திருந்ததாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக, நேர்மையான மற்றும் சுதந்தரமான தேர்தல் நடைமுறை வேண்டும் என்ற அக்கறையோடு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை ஆணையம் வழங்கி வந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின்போது அத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பின்வரும் உத்தரவுகளை ஆணையம் வலியுறுத்திக் கூறுகிறது:-
(1) வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர், அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், அப்போது அங்கு இருக்கக்கூடிய வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரது முன்னிலையில் Close பொத்தானை அழுத்தி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை மூட வேண்டும்.
(2) அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும் வாக்குப் பதிவின் முடிவில் 17-A படிவத்தின் இறுதிப் பதிவுக்குப் பின்னர் கோடு ஒன்றை வரைய வேண்டும் அதற்குப் பின்னர், கொடுக்கப்பட்டிருக்கும் 17-A; படிவத்தின் இறுதிப் பதிவின் தொடர் எண் ----; அறிக்கையில் கையெழுத்திட்டு, அதற்குக் கீழே, அப்போது அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்குச்சாவடி முகவர்களின் கையெழுத்துகளையும் பெற வேண்டும்.
(3) வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர், அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் கணக்கு விவரங்களின் (படிவம் 17Cல்) சான்றொப்பமிட்ட நகல் ஒன்றை, அப்போது அங்கு இருக்கக்கூடிய வாக்குச்சாவடி முகவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் vd தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...