கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பொதுக்
கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை ஆன்லைன் லாட்டரி
நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் 2016-17-ஆம்
கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களைச் செலுத்த
கேட்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், கர்நாடகம் முழுவதும் 2,74,628 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இவற்றை பரிசீலித்த பொதுக் கல்வித்துறை, 1,38,229 மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு ஆன்லைன் லாட்டரியில் பங்கேற்க தகுதியானவர்கள் என்று அதன் பட்டியலை ஏப்.23-ஆம் தேதிவெளியிட்டது.ஆனால், இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்ததால், ஆன்லைன் லாட்டரிக்குத் தகுதி பெறாத விண்ணப்பங்களை மறுபடியும் பரிசீலித்த பொதுக் கல்வித் துறை மேலும் 50 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டது.இதனால் ஆன்லைன் லாட்டரிக்குத் தகுதியானவர்களின் விண்ணப்பம் 1,88,077 ஆக உயர்ந்தது.
இந்த பட்டியல் மே4-ஆம் தேதி ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ர்ர்ப்ங்க்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஏதாவது ஆட்சேபம் இருந்தால் அதையும் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.இந்த நிலையில், பெங்களூரு, கே.ஆர்.சதுக்கத்தில் உள்ள பொதுக்கல்வி இயக்க கட்டடத்தின் 3-ஆவது மாடியில் சனிக்கிழமை (மே 7)மாலை 3 மணிக்கு 2016-17-ஆம்ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் லாட்டரி நடக்கவிருக்கிறது.அப்போது கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர், செயலாளர், ஆணையர், இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ர்ர்ப்ங்க்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்.ந்ஹழ். ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தேதி மற்றும் நடைமுறைகளை சனிக்கிழமை வெளியிட பொதுக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...