திருவாடானை தொகுதியில் சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு வாக்குச் சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாடானை அருகே சி.கே.மங்கலம் தனியார் பள்ளியில், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.பின்னர், அவர்களுக்கான அஞ்சல் வாக்கு சீட்டு அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு குளறுபடி நடந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள், சி.கே.மங்கலத்தில் திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, சுமார் 1 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கபட்டது. தகவலறிந்த திருவாடானை காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் மெக்கலரின் எஸ்கால், திருவாடானை வட்டாட்சியர் சுகுமாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, அஞ்சல் வாக்கு சீட்டு பெற்ற ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...