கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு
செய்யும் பணியில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.
ஐகோர்ட்டு உத்தரவுகோடை விடுமுறை முடிவதற்குள் பள்ளி
வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என போக்குவரத்துதுறைக்கு
சமீபத்தில் நாக்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ளஅனைத்து பள்ளி வாகனங்களையும் கோடை விடுமுறைக்குள் ஆய்வு செய்ய வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் மும்பையில் உள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு கோடை விடுமுறை முடிவதற்குள் பள்ளி வாகனங்களை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கோடைக்குள் ஆய்வுஇந்த ஆய்வின் போது பள்ளிவாகனங்களின் எந்திர தன்மை, வாகன பெயிண்டின் நிறம், இருக்கைகள், அவசரகால வெளியேறும் பகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சரியாகஉள்ளதா என போக்குவரத்து அதிகாரிகளால் சோதனை செய்யப்படும். இந்த ஆய்விற்கு பிறகு முறையாக பராமரிக்கப்பட்டு வரும் பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படும்.
இதுகுறித்து வட்டாரப்போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “ கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய நாக்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதிகாரிகளின் ஆய்விற்கு கொண்டு வரப்படாத பள்ளி வாகனங்களுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படாது ” என்றார்..

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...