சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் தேர்தல் பற்றிய பேச்சாகவே உள்ளது
.
இந்த நிலையில், பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுடன் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர அல்லது 4 சக்கர வாகனங்கள் சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் ஏராளமான வாகனங்களுடன் வீதிகளில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். எனவே இது குறித்து தேர்தல் விதிமுறையை விளக்கும் வகையில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...