தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. அப்போது, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பார்கள் என்று சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார். மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 232 உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடரில் பதவியேற்கவுள்ளனர்.
புதிய உறுப்பினர்களுக்கு பேரவை தாற்காலிகத் தலைவர் எஸ்.செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.தற்காலிக சபாநாயகரானார் செம்மலை..! உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்போது, சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 3-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இது புதிய சட்டப் பேரவையின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ரோசய்யா உரையாற்றுவார். இதையடுத்து, நிகழ் நிதியாண்டுக்கான தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். துறை வாரியான செலவினங்களுக்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...