நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப்
பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு
தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம்,
ஃபரூக்காபாதில்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர்
கட்டேரியா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கையில் சில அடிப்படை மாற்றங்களைச் செய்து, அதை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதாவது தற்போதைய கல்விக் கொள்கையில், 8ஆம் வகுப்பு வரையில் தேர்வுகளில் மாணவர்களை தோல்வியடையாமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியக் கல்விக் கொள்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியக் கல்விக் கொள்கையை ஏற்கத் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டில் புதிதாக 20 தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகங்களில்,மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சர்வதேசத் தரம் வாய்ந்த 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், முஸ்லிம்கள் மீது காட்டும் அன்பு போலியானது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோருவதில் தவறில்லை.ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துகள் ஆகியோருக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குதான் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்தனர். தலித்துகளின் பெயரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நிதி வசூலிக்கிறார். ஆனால், அந்தப் பிரிவினரிடையே அவரால் மீண்டும் செல்வாக்கு பெற முடியாது என்றார் கட்டேரியா.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...