வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கக்கோரி, கதிர் யாதவ் என்பவர் உச்ச
நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
ஃபேஸ்புக், ட்விட்டர்
போன்ற சமூக வலைதளங்களைப் போன்று வாட்ஸ் அப்பும் பலதரப்பட்ட மக்களால்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் பல்வேறு மாற்றங்களை சமீபத்தில்
வாட்ஸ் அப் நிறுவனம் செய்திருந்தது. அதன்படி, வாட்ஸ் அப் மூலம்
அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்க, படிக்க
முடியும் எனவும், நடுவில் வாட்ஸ் அப் நிறுவனமோ மற்ற யாருமோ பார்க்க
முடியாது எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வாட்ஸ் அப்பிற்கு தடை
விதிக்கக்கோரி தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் கதிர் யாதவ் உச்ச
நீதிமன்றம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ''வாட்ஸ்
அப்பின் புதிய வசதி தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, அந்த
ஆப்பிற்கு தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இந்த மனு விரைவில்
விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...