AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...
விவசாயம், தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர 12ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம்), பிஎஸ்சி (தோட்டக்கலை), பிஎஸ்சி (வனவியல்), பி.டெக். (வேளாண் பொறியியல்), பி.டெக். (உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்பம்), பி.டெக். பயோ இன்பர் மேட்டிக்ஸ் உட்பட 15 விதமான வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் சேர மே 12ம் தேதி முதல் ஆன்லைனில் (www.tnau.ac.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் மட்டுமே விண் ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 11-ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...