உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம்,
லாலிபாப் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி
ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் (சிஓடி) இந்த
ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு செய்யலாம். போனை டெலிவரி செய்வதற்கான கட்டணம்
இதில் அடங்காது. வழக்கமான டெலிவரி தொகையை செலுத்த வேண்டும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில்
இந்தியர்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இது வழங்கப்படும் என
ரெட்டி தெரிவித்துள்ளார்.
namotel.com இணையதளத்தில் ஸ்மார்ட்போன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அது ஸ்மார்ட்போனைப் பற்றி விளக்குவதற்காக மட்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Intha phonai than AMMA vaangi thara porangala
ReplyDelete