எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான
விண்ணப்பம் திங்கள்கிழமை (மே 9) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
எனினும்,
தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம்
வியாழக்கிழமை அறிவிக்கும் முடிவைப் பொருத்து விண்ணப்பம் வழங்குவது
தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்ப விநியோகம்:
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான மே 9-ஆம் தேதி முதல் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக் குழு அலுவலகத்துக்கு சென்று சேர வேண்டிய கடைசித் தேதி மே 27-ஆம் தேதியாகும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முதற்கட்ட கலந்தாய்வும், ஆகஸ்ட் மாதத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.விமலா அறிவித்தார். இதற்காக 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:
இந்த நிலையில், தேசிய தகுதிகாண் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மே 5) மீண்டும் நடைபெறுகிறது.இதனால் ஏற்கெனவே அறிவித்தபடி மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை விநியோகிப்பது தொடர்பாக சிக்கல் நீடிக்கிறது. தேசிய தகுதிகாண் தேர்வை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (மே 5) ரத்து செய்தால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கும்.ஒருவேளை தேசிய தகுதிகாண் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பே அமல்படுத்தப்படுமானால், விண்ணப்ப விநியோகம் நடைபெறாது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் செல்வராஜன் கூறியது:உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை வெளியாகும் தீர்ப்பை பொருத்தே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க முடியும். தமிழகத்தின் சார்பாக தீர்ப்பு வரும் என்று 90 சதவீதம் நம்புகிறோம். இதுவரை விண்ணப்பவிநியோகம் குறித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...