ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும்
ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்
கல்லுாரியில், நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டு
மொத்தமாக, 154 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், இணையதளத்தில்
வினியோகிக்கப்பட்டு வருகின்றன.ஜூன், 8ம் தேதி, மாலை 5:00 மணி வரை
விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டுகளை, ஜூன், 29ம் தேதி முதல் டவுண்லோடு
செய்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு:
நர்சிங் நுழைவுத் தேர்வு, ஜூலை 10ம் தேதி காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை, சென்னை, புவனேஸ்வர், காந்தி நகர்,ஜம்மு, மும்பை, புதுச்சேரி, ராஞ்சி, திருவனந்தபுரம், சோனிபட் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. நுழைவுத் தேர்வு, 90 நிமிடங்களுக்கு நடக்கும்.பொது, ஓ.பி.சி., பிரிவினருக்கு 600 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 400 ரூபாய் கட்டணம். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உண்டு. மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய மருத்துவச் சான்றிதழ்களை, விண்ணப்பத்துடன் இணைத்து, ஜூன், 26ம் தேதிக்குள், பதிவாளர், ஜிப்மர் நிர்வாக கட்டடம், புதுச்சேரி - 605 006 என்ற முகவரிக்கு அனுப்பி, கட்டண விலக்கு பெறலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...