தமிழக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை
எண்ணும் பணியை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது மாலை 5 மணிக்கு
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
திருப்பூரில் கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பணம் கிடைத்ததை அடுத்து, அதன் மீது விசாரணை முடிவடையும் வரை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதே போல, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கோரி வழக்குரைஞர் ஒருவர் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்.வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்கக் கோரிய இவ்விரு மனுக்கள் மீதும் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பளிப்பதாகக் கூறியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...