Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிவில் சர்வீசஸ் தேர்வு மார்க் வெளியீடு:52 சதவீதம் பெற்றவர் முதலிடம்.

           ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வில், தேசிய அளவில்முதலிடம் பிடித்தவரே, 52 சதவீத மதிப்பெண் தான் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
 
        மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும்,யு.பி.எஸ்.சி., சார்பில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 உயர் பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு சமீபத்தில் நடந்தது.

நாடு முழுவதும் உள்ள, 1,078 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இதற்கான முடிவுகள், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன; டில்லியைச் சேர்ந்த டினா தபி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த சரண்யா தேசிய அளவில், ஏழாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியலை, யு.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. இதன்படி, முதலிடம் பிடித்த டினா தபி, மொத்த மதிப்பெண்களில், 52 சதவீதமே பெற்றுள்ளார்.எழுத்து தேர்வுக்கு, 1,750 மதிப்பெண்; நேர்முக தேர்வுக்கு, 275 மதிப்பெண் என, மொத்தம், 2,025 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதில், டினா தபி எழுத்து தேர்வில், 868; நேர்முக தேர்வில், 195 என, மொத்தம், 1,063 மதிப்பெண் பெற்றுள்ளார்.தமிழகத்தை சேர்ந்த சரண்யா எழுத்து தேர்வில், 818; நேர்முக தேர்வில், 165 என, மொத்தம், 983 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட, 1,078 பேரில், கடைசிஇடம் பிடித்தவர், மொத்தம், 697 மதிப்பெண் பெற்றுள்ளார்.இது மொத்த மதிப்பெண்ணில், 34.42 சதவீதம் மட்டுமே.சிவில் சர்வீசஸ் தேர்வில், விடைத்தாள் திருத்தம் கடினமாக இருப்பதால், தேர்வர்கள் பெரும்பாலும், மிக அதிகமதிப்பெண் பெற முடிவதில்லை என, யு.பி.எஸ்.சி., வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive