Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்

         பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று(மே 24) முதல் விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார்.
 
        அவர் கூறியதாவது:டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., 2 ம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதற்கான விண்ணப்பம், www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தை 'ஆன்-லைனில்' பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன் சேர்க்கை கட்டணம் ரூ.300 க்கான டி.டி.,-மதிப்பெண் விபர பட்டியல், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். முன்னாள் ராணுவவீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை செயலர், பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை, அழகப்ப செட்டியார், பொறியியல் கல்லுாரி, காரைக்குடி என்ற முகவரிக்கு ஜூன் 10 க்குள் அனுப்ப வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. டி.டி., இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive