பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் பிளஸ்2தேர்வு நடந்தது. பிளஸ்2விடைத்தாள்கள் முழுமையாக திருத்தப்பட்டு விட்டது. தனித்தனியே மார்க் போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டன.எந்த நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட,பள்ளி கல்வி துறை தயாராகவே உள்ளது.தேர்வு முடிவுகளை,அ.தி.மு.க.,தன் தேர்தல் பிரச்சாரத்துக்கு எடுத்து கொள்ள கூடும். அதிக சதவீத மாணவ,மாணவியர் வெற்றி பெறுதல்,அதிக மதிப்பெண் பெறுதல் போன்றவற்றை,தன் அரசின் சாதனைகளாக கூறி பிரச்சாரம் செய்யவாய்ப்பு உள்ளது.எனவே தேர்தலுக்கு பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி துறையினர் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று பிளஸ்2தேர்வு முடிவுகள்,வரும்17ம் தேதி வெளியாகும்;எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு முடிவுகள்,வரும், 25ம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. பிளஸ்2தேர்வு முடிவுகள்,வரும்17ம் தேதி அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:வரும், 16ம் தேதி தான்,தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தான் சார்ந்த தொகுதியில் ஆசிரியர்கள் இருக்க கூடாது என விதிமுறை உள்ளது. எனவே,தேர்தல் அதிகாரிகள் ஆசிரியர்களை வெவ்வேறு பகுதிக்கு,தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்து விடுவர். தேர்தல் முடிந்த பின்,ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை,சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள்,ஓட்டு சாவடி மையங்களுக்கு வந்து பெற்று கொள்ளும் வரை,ஆசிரியர்கள் அந்தந்த மையங்களிலேயே இருக்க வேண்டும்.அதன் பின்னரே வீட்டுக்கு கிளம்பி செல்ல முடியும். நள்ளிரவு அல்லது அதிகாலையில் தான் ஆசிரியர்கள்,வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. தேர்வு முடிவுகளை பெற சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வகுப்பு மற்றும் பாடப்பிரிவு ஆசிரியர்கள்,சி.இ.ஓ. அலுவலகத்துக்கு காலை, 8மணிக்குள் வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும்.
முதல் நாள்,தேர்தல் பணியை விடிய,விடிய மேற்கொண்ட நிலையில்,மறுநாள் எவ்வாறு தேர்வு முடிவுகளுக்கான பணியை மேற்கொள்ள முடியும்.எனவே,பள்ளி கல்வி துறை தேர்வு முடிவுகளுக்கான தேதியை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் நிலையை எண்ணி பார்த்து,தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...