'தேசிய மூலதன பொருட்கள் உற்பத்திகொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியுள்ளது.
இதன் மூலம், 2.10 கோடி புதிய வேலைவாய்ப்புகள்
உருவாக்கப்படும்' என, அரசுஅறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி
தலைமையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய அரசு செய்தி தொடர்பாளர்
கூறியதாவது: மூலதன பொருட்கள் உற்பத்தி கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், இத்துறையில், 2014 - 15ம்
ஆண்டுநிலவரப்படி, 2.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ள உற்பத்தி, 2025ம் ஆண்டு,
7.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால், 2.10 கோடி புதிய
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம்
பாலக்காடு, கர்நாடக மாநிலம் தார்வாட், சத்தீஸ்கர் மாநிலம் பிலாய், ஜம்மு -
காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் கோவாவில், புதிதாக ஐ.ஐ.டி.,க்கள்
அமைக்கவும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...