தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285
பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் பாடநூல்களைப் பெறுவதற்கு,
இந்தாண்டு முதல் பல்வேறு எளிதான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பள்ளிகளுக்குத் தேவைப்படும் பாடநூல்களை பள்ளிகள் தாங்களே, www.textbookcorp.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து அதற்கான தொகையை இணையதளம் மூலம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.மேலும், பாடநூல் தேவைப்படும் பெற்றோர் மற்றும் மாணவர்களும் இணையதளம் மூலம் பதிவு செய்து, பணம் செலுத்தி அவர்கள் விரும்பும் முகவரிக்கு பாடநூல்களை பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது."இ' சேவை மையங்கள்: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சியின் மூலம் அனைத்து தாலுகா தலைமையிடங்களில் செயல்படும் 285 பொது இ-சேவை மையங்களின் மூலம் மாணவர்கள் மற்றும் தனியார் பாடநூல்களை பெற்றுக் கொள்வதற்குமான சேவை கடந்த பிப்ரவரி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் தங்களின் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சியின் பொது இ-சேவை மையங்களில்புத்தகங்களின் இருப்பை அறிந்துகொண்டு, வேண்டிய புத்தகங்களை பதிவு செய்து அதற்கான தொகையைச் செலுத்தி தங்களின் முகவரிக்கு கூரியர் சர்வீஸ் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 285 பொது இ-சேவை மையங்களின் முகவரிகள் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...