தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு
இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி சிறுபான்மையற்ற
தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு எல்கேஜி
மற்றும் 1ம் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2016 -
17ம் கல்வியாண்டிற்கான இட ஒதுக்கீடு விவரங்களை பள்ளிகள் தங்களது பள்ளி
அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை மே 3 முதல் 9ம் தேதி
வரை விநியோகம் செய்ய வேண்டும்.பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம்,
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், உதவி
தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் பெற்றோர்கள் இதற்கான விண்ணப்பங்களை
பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ம் தேதி மாலை 5
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுடன் வருமான சான்றிதழ்,
சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்களை இணைத்து ஒப்படைக்க வேண்டுமென
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...