மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்
.இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்குஅகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி முதல்கட்ட தேர்வு முடிவுற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.இந்நிலையில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவிருப்பதாக இன்று செய்திகள் வெளியாயின.இச்செய்தி அடிப்படை ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, யுஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வு தொடர்பாக சில மாநிலங்களில் பிரச்னை உள்ளது. அவை அனைத்தும் விரைவில் சீர் செய்யப்படும் என்றார் நட்டா.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...